செல்போன் திருடர்கள் 'ஈ'தான் ஓட்டணும்
செல்போன் திருடர்கள் 'ஈ'தான் ஓட்டணும்: செல்போன் திருடுபோனால், செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் !
ஒரு வேளை செல்போன் திருடுபோனால், அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய
தொழில்நுட்பம் சோதனை அளவில் இருக்கிறது.
செல்போனை செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், தங்களது உற்பத்தியில் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
இதனை முன்னிட்டு, செல்போனில் இருக்கும் ஐஎம்இஐ எனப்படும் 15 இலக்க எண்ணை அழிப்பது குற்றச் செயலாகவும், அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் வகை செய்ய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மையத்தில், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதித்து வருகிறது.
சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடின்டி ரெஜிஸ்டர் (CEIR) எனப்படும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், செல்போன்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும், செல்போன் திருட்டுச் சம்பவங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது இந்த சிஇஐஆர் தொழில்நுட்பம் ஒவ்வொரு செல்போனின் ஐஎம்இஐ தகவல்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்துத் தொலைத்தொடர்பு எண்களுக்கும் மையப் புள்ளியாக சிஇஐஆர் இருக்கும். இதில், களவுப் போன அல்லது தொலைந்து போன செல்போன் குறித்த தகவலை அனுப்பிவிட்டால், உடனடியாக அந்த செல்போன் எந்த தொலைத்தொடர்பு எண்ணுக்கும் பயன்படாத வகையில் முடக்கிவிட முடியும். அந்த செல்போனில் சிம் கார்டு இல்லாவிட்டாலும் இதனை செயல்படுத்த முடியும் என்கிறது தகவல்கள்
Comments
Post a Comment