வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க புதிய வழி!!!
வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை அவர்களின் சமூக வலைதள கணக்குகள் மூலம் கண்டுபிடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி வளையத்தை அதிகரிக்கவும், வரி வசூலை முறையாக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் ஒன்றிய அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. இருப்பினும் அதற்கு ஏற்ப வருவாய் வருவதில்லை. இதனால் பட்ஜட்டில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் வருவாயை அதிகரிக்கவும், வரி வசூலை முறைப்படுத்தவும் ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூக வளைதளங்கள் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை கண்காணிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் செல்லும் உணவகங்கள், உடுத்தும் உடைகள், செல்போன்கள், வாகனங்கள், சுற்றுலா பயணங்கள் போன்றவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரையும், அவர்கள் செய்யும் செலவுகளையும் சமூக வலைதளங்கள் மூலம் கண்காணிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
Comments
Post a Comment