CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு



''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பி
ரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும். ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப்படாது என கைவிடப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய 
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank