JIO போன் வாங்கலாமா ? வேண்டாமா ? – குழப்பத்துக்கு தீர்வு

இந்தியாவின் பரபரப்பான பெயர் என்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவைகள்தான்,
தற்போது புதிதாக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ள
ஜியோபோன் வாங்கலாமா ? வேண்டாமா ? அறிவோம் வாருங்கள்.

ஜியோபோன்
ஜியோ போன் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் நாம் வெளியிட்டிருந்தாலும், இந்த 4ஜி மொபைலை வாங்குவது நண்மையா ? மூன்று வருடத்துக்கு பிறகு ரூ.1500 கட்டணத்தை திருப்பி தருமா ஜியோ என பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு பெறும் வகையில் ஜியோ ஃபோன் கவர் ஸ்டோரி காணலாம்.
ஜியோ போன் முற்றிலும் இலவசமா ?
இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2ஜி சேவை பெற்ற ஃபீச்சர் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பெரும்பாலும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தேவையே மிக அதிகமாகும்.
4ஜி உயர்தர இணைய வேகத்தை பெறும் வகையில் கொண்டு வழங்கப்படுகின்ற இந்த சேவையை சாதாரன மக்களும் பயன்படுத்தும் வகையில் ஜியோ திட்டமிட்ட நோக்கமே ஃபீச்சர் போன் எனப்படுகின்ற பட்டன்களை கொண்ட மொபைல் ஆகும்.
இன்றைக்கு ஸ்மார்ட்போன் உலகம் மிக விரிந்து கிடந்தாலும், ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களை முழுமையான ஸ்மார்ட்போனுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லை , என்பதனை உணர்ந்த ஜியோ எடுத்த அதிரடி முடிவுதான் 4ஜி எல்டிஇ சேவையுடன் கூடிய ஃபீச்சர் போன் திட்டம், தற்போது இதனை சாதித்து காட்டுவதற்கு தயாராகிவிட்டது.
எந்த கட்டணமும் மொபைலுக்கு வசூலிக்கப்படாது, ஆனால் ரூ.1500 மட்டுமே திரும்ப பெறதக்க பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்த வேண்டும், இதனை மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. (எதோ காரணத்தால் ஜியோ மொபைல் தவறிவிட்டாலோ அல்லது சேவையை பயன்படுத்த தவறினாலோ கட்டணத்தை திருப்பி தருமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க பெறவில்லை )
ஜியோபோன் டேட்டா பிளான்
ஜியோஃபோன் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் (28 நாட்கள்) அதிகபட்சமாக ரூ.153 செலுத்தினால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எந்த நிறுவனத்துக்கும் மற்றும் வரம்பற்ற குறுஞ்செய்தி (100) உள்பட வரம்பற்ற டேட்டா (இது தினசரி 500எம்பி ஆக இருக்கலாம்) என குறிப்பிட்டுள்ளது.
மேலும் ரூ, 24 கட்டணத்தில் இரு நாட்கள் பிளான் மற்றும் ரூ.54 கட்டணத்தில் வாரம் முழுவதும் (7 நாட்கள்) பயன்படுத்தலாம். இதுதவிர கூடுதலான டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ரூ. 309 கட்டணம் எதற்கு என்றால் உங்கள் ஜியோ போனை எந்த டிவியிலும் இணைத்து இணையத்தை வாயிலாக தொலைக்காட்சியில் சேவைகளை பெறும் வகையிலான பிளான் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு எனில் ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல கலைஞர் டிவியிலும் இணைக்கலாம் என்றே நினைக்கிறேன்.
ஜியோபோன் வசதிகளும் சிறப்புகளும்
இது ஒரு மினியேச்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லும் வகையிலான பல்வேறு வசதிகளை 2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் மற்றும் பிரசத்தி பெற்ற வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றையும் இணைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபயர்ஃபாக்ஸ் ஒஎஸ் அடிப்படையாக கொண்ட கெய் ஓஎஸ் (KaiOS) கொண்டு இயக்கப்படுகின்ற இந்த 4ஜி ஜியோபோனில் பிரத்தியேகமான ஆப் ஸ்டோர் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பயனார்கள் விரும்பும் ஆப்கள் தரவிறக்கலாம்.
இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய  வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.
செல்ஃபீ மற்றும் கேமரா பிரியர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் பெரிய அளவில் பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை. இரண்டு மெகாபிக்சல் விஜிஏ கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
வை-ஃபை ஹாட்ஸ்பாட் வசதி வழங்கப்பட்டுள்ளதால் கணினி மற்றும் மொபைல்கள் போன்றவற்றுடன் இணைப்பதுடன், தானாகவே மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான மென்பொருள் அப்டேட்ட் உள்பட NFC வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கேம்ஸ் பற்றி எந்த முக்கிய தகவலையும் ஜியோ வழங்கவில்லை என்பதனால் கேம் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்று.


ஜியோ போன் வாங்கலாமா ?
2ஜி சேவையை மட்டுமே விரும்பி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாங்கலாம்.
குறிப்பாக இதில் இரட்டை சிம் கார்டுகள் பயன்படுத்தலாம் என்பதனால் ஒன்று ஜியோ 4ஜி மட்டுமே இருக்க வேண்டும் மற்றொன்று உங்களுடைய 2ஜி என்னை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் மாதம் ரூ.100 ரீசார்ஜ் செய்பவர்கள் என்றால் வரி பிடித்தம் போக ரூ. 80 டாக்டைம் கிடைக்கலாம் மற்றும் கூடுதலாக அதிகம் பேசுபவர்கள் தனியான பூஸ்டர் பேக் போட வேண்டிய நிலை இருக்கலாம். இவற்றை சமாளிக்க மாதம் ரூ.153 மட்டும் ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை பெறலாம், தினமும் 100 எஸ்எம்எஸ், 500எம்பி டேட்டா பெறலாம்.
ஜியோ போன் வழியாக எண் 5 அழுத்தி பிடித்தால் உங்களுக்கு ஆபத்து உள்ளதை உங்கள் விருப்பமான பதிவு செய்யப்பட்ட நண்பரின் எண்ணுக்கு அவசர தேவை என்ற செய்தியை வழங்கும்.
உங்களுடைய தற்போதைய 2ஜி சேவையை விட கூடுதலான பலன்களையே பெறலாம்.
ஸ்மார்ட்போனுடன் பீச்சர்போனை வைத்திருக்கும் பிரியர்களுக்கு ஏற்றதாகவே இது இருக்கும்.
ஜியோபோன் வேண்டாம் ? ஏன்
அதிகப்படியான இணைய வேகம், செல்ஃபீ, கேமரா, கேம் பிரியர்களுக்கு இந்த மொபைல் சரிப்பட்டு வராது. தொடுதிரை உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல்வேறு வசதிகளை நீங்கள் இதில் பயன்படுத்த இயலாது.
ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு மட்டுமே நோ சொல்லாம்.
ரூ. 153 மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டும் அல்லது ரூ. 24 இரு நாட்களுக்கு அல்லது 7 நாட்களுக்கு ரூபாய் 54 செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்..!
டவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என ஜியோ குறிப்படும்போது அடுத்த 12 மாதங்களுக்குள் 99 % இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை முற்றிலும் கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
ஜியோ போன் உண்மையில் இலவசமே இல்லை..!
நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ. 153 ரீசார்ஜ் செய்தால் (ரூ.54 அல்லது ரூ.24 ) அதன் மொத்தம் ரூபாய் 1836 நீங்கள் பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தியுள்ள ரூ. 1500 என மொத்தம் ரூ. 3,336 ஆக மொத்தம் மூன்று வருடங்களுக்கு நீங்கள் செலுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை ரூபாய் 5508 மற்றும் டெபாசிட் தொகையை சேர்த்து ரூபாய் 7008 மொத்த தொகையில் சராசரியாக 6-10 % வட்டி என கணக்கிட்டாலே வருடம் 300 முதல் 500 வரை வட்டியாக கிடைக்கும் என்பதனால் ரூ.1500 பெறுவது ஜியோவுக்கு சாதாரனமே என்பதுதான் உண்மை.
வருகை
வரும் ஆகஸ்ட் 15ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஜியோ போன், இதே வாரத்தில் டெஸ்ட் செய்து பார்க்கலாம், ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு ஜியோ டிஜிட்டல் ஸ்டோர் விற்பனையாளர் மற்றும் மை ஜியோ ஆப் வழியாக தொடங்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும். வாரம் 5 மில்லியன் அதாவது 50 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்படும்.
நீங்க என்ன முடிவு எடுத்திங்க..! கமென்ட் பன்னுங்க..! தற்போது ஜியோ மொபைல் வருகை குறித்து முன்ன்றிவப்பை பெற்ற ஜியோ இணையதளம் மற்றும் மைஜியோ ஆப் வழியாக பதிவு செய்து கொள்ளுங்கள்..!

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)