அடுத்தது என்ன ? TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு

TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு -
பிரதீப் ப.ஆ.



தேர்ச்சி :
இட ஒதுக்கீடு பிரிவினர் 82 மதிப்பெண்
பொது பிரிவினர் 90 மதிப்பெண் பெற்று இருப்பின் தேர்ச்சி பெற்றவர் ஆவர்

அடுத்தது என்ன ?
தேர்ச்சி பெற்றவர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்

காலி பணியிடம்:
கடந்த கல்வியாண்டு, நடப்பு கல்வி ஆண்டு காலி பணியிடம் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்

தேர்வு செய்யும் முறை :
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய வெய்டேஜ் முறையே கடைபிடிக்க பட உள்ளது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடம் பிரித்து வழங்கப்படும்
அதிக வெய்டேஜ் உடையவர் பட்டியல் தெரிவு செய்து வெளியிடப்படும்
தெரிவு செய்யப்பட்டவர் கலந்தாய்வு மூலம் உரிய பள்ளியில் பணி அமர்த்தப்படுவர்.

இரு டெட் தேர்வில் வென்றவரா ?
ஒரு டெட் சான்றிதழ் 7 ஆண்டுகள் தகுதி பெற்றது.
இரண்டு டெட் தேர்விலும் வெற்றி பெற்றவருக்கு அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கருத்தில் கொள்ளப்படலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என்ன தேவை ?
* சுய விவர பட்டியல் + ஆளறி சான்று (TRB தளத்தில் வெளியிடப்படும்)
* SSLC மதிப்பெண் பட்டியல்
* HSC மதிப்பெண் பட்டியல்
* UG பட்டம்
* UG மதிப்பெண் சான்றிதழ்கள்
* DTEd சான்றிதழ் + மதிப்பெண் பட்டியல்
* கிரேடு பட்டியல் (UG/B.Ed) விவரம் - சான்றிதழில் விவரம் இருப்பின் தேவை இல்லை
* பி.எட் பட்டம்
* தமிழ் புலவர் (TP T) சான்றிதழ்
* தமிழ் வழி கோரியவர் - உரிய சான்று
* இன சான்றிதழ்
( திருமணமான பெண் தந்தை பெயரில் சமர்பிக்க வேண்டும் )
* நன்னடத்தை சான்று
* உடல் ஊனமுற்றவர் சான்றிதழ்
இரு நகல் அரசு அலுவலரால் மேலொப்பம் (attested) பெற்று வர வேண்டும்
வாழ்த்துகளுடன் : தேன்கூடு 🐝🐝🐝

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)