TNPSC - துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!

துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!

(G.O.(Ms) No.33, P&AR (M) Department, Dated: 02.03.2017)
* தேர்வுகள் இதுவரை விவரிப்புவகை (Descriptive type) கேள்விகளையே கொண்டிருந்தது. இனி 80 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை (Objective Type) வினாக்களையும்,
20 மதிப்பெண்களுக்கு விவரிப்பு வகை (Descriptive type) வினாக்களையும் கொண்டிருக்கும். (சில துறைத் தேர்வுகளுக்கு இந்த விகிதம் 60:40 / 40:60 / 50:50 ஆகவும் உள்ளது)

* தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 இலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (கொள்குறிவகை வினாவில் 36 மதிப்பெண்களும், விவரிப்புவகை வினாவில் 9 மதிப்பெண்களும் பெறவேண்டும்.)

* பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. சமகாலத்திற்கு ஏற்ப தலைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* கூட்டுறவுத் துறையின் 8 தாள்கள் 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளன. அதாவது தாள்-1 தாள்-2 என்றிருந்த தாள்கள் ஒன்றாக்கப்பட்டு உள்ளன.

* அனைத்து தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக நேரம் 02 மணி 30 நிமிடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விவரிப்பு வகை தேர்வுகளில் சிலவற்றுக்கு மட்டும் நிர்ணயிக்கப்படட புத்தகங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும். கொள்குறிவினாவிற்கு புத்தகம் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

* தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.50 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)