வானிலை ஆய்வு மையத்தில் 1102 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு


வானிலை ஆராய்ச்சி உதவியாளர் பதவிபெற விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் . வானிலை ஆய்வு மையத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு நிரப்பபட உள்ள அறிவியல் உதவியாளர் பணி
யிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .


வேலைவாய்ப்பு
  
வானிலை ஆய்வு மையத்தில் விண்ணப்பிக்க  ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . வானிலை ஆய்வு மையத்தில் சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட் பதவி காலியாக உள்ளது . , மொத்த நிரப்படவுள்ள காலிப்பணியிடங்கள் 1102 ஆகும் . இந்தியா முழுவதும் பணியிடம் உள்ளன. இப்பணிக்கான சம்பளம் ரூபாய் 9,300 முதல் 34,800 தரவூதியம் ரூபாய் 4,200 ஆகும் .
இயற்பிலை பாடமாக கொண்டு பிஎஸ்சி பட்டப்படிப்பில் 60% சதவீகிதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கம்பியூட்டர் சயின்ஸ் ,ஐடி , கம்பியூட்டர் அப்ளிகேஷன் போன்ற பிரிவுகளை இயற்பியலுடன் சேர்த்து படித்திருக்க வேண்டும் . எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் . மேலும் பிளஸ்2 வில் இயற்பியல் படித்தவராக இருந்திருக்க வேண்டும். இயற்பியல் படித்தவர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள வேண்டும் . 
இப்பதவிகளுக்கான வயதுவரம்பு 04.08.2017 அன்று , 30க்குள் இருக்க வேண்டும் . தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு ,கல்வித்தகுதி, இதரத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 20.11.2017 முதல் 27.11.2017 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2017 ஆகும் . வானிலை ஆய்வு மைத்தில் பணி வாய்ப்பு என்பது மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும் . வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினால் வேலை வாய்ப்பு உறுதியாகும் . எஸ்எஸ்சி பணியின்  முழுவிவரம்     அறிந்துகொள்ள www.ssc.nic.in என்ற இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் . இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் ரூபாய் 100 செலுத்த வேண்டும் பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை . விண்ணப்பிக்க எஸ்எஸ்சியின் ஆன்லைன் தளம்  www.ssconline.nic.in  மூலம் விண்ணப்பிக்கலாம் .

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank