பிளஸ் 1 மாதிரி வினாவில் 'பெரிய' மாற்றங்கள்


பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.



'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதில் நடப்பாண்டு முதல் பிளஸ் 2வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் என்பதை பிரித்து, பிளஸ் 1, பிளஸ் 2வில் தலா 100 மதிப்பெண் என்ற அடிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இதற்காக பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டு களாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2க்கான பேட்டன், மாதிரி வினா,விடையளித்தல் முறை போன்றவை முற்றிலும் மாறி உள்ளதாகவும் பிற மாற்றம் குறித்தும் ஆசிரியர்கள் கூறியதாவது: 
தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் உட்பட 30 பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ்கிருதம் பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை. 
முன்பு மொழிப்பாடத்தில் 1 மார்க் வினா இருக்காது. தற்போது புதிதாக சேர்த்துள்ளனர். பிற பாடத்துக்கு 4 கொடுத்து, 3 விடை எழுத
சொல்வார்கள். தற்போது 4ஐயும் எழுத வேண்டும்.10 மார்க் நெடுவினா எழுதுவர். அதை முற்றிலும் நீக்கி விட்டு,5 மதிப்பெண் வினாவாக்கி,எண்ணிக்கையை ஒவ்வொரு பாடத்துக்கும் அதிகரித்து ள்ளனர். 
முன்பு சில பாடங்கள் அல்லது சில பகுதியை விடு தல் செய்வார்கள். இப்போதுள்ள வினாப்படி, முழு புத்தகத்தையும் படித்தே ஆக வேண்டும். இவ் வினா முறை, போட்டித்தேர்வுக்கானது போல உள்ளது. 
முன்பு மொழி பாடத்தில், எந்த மதிப்பெண் வினா விலும் கட்டாயமாக, குறிப்பிட்ட வினாவை எழுத வேண்டும் என இருக்காது. ஆனால் இயற்பியல், வேதியியல் போன்ற பாடத்தில் கட்டாயம் எழுத வேண்டும் என்ற வினா இருந்தது. குறிப்பிட்ட பாடத் தில் இருந்துகட்டாயமாக வினா வரும் எனவும் இருந்தது. 
தற்போது, குறிப்பிட்ட பாடத்தில் இருந்து வினா வரும் என குறிப்பிடாமல், அனைத்து பிரிவிலும் குறிப்பிட்ட வினாவை கட்டாயம் எழுத வேண்டும் என, வினாத்தாளில் குறிப்பிட்டுள்ளனர். 
முன்பு லெட்டர் ரைட்டிங், கட்டுரை போன்றவை 10 மதிப்பெண் வினாவாக இருந்தது. தற்போது 5 மதிப் பெண் வினாவாகிவிட்டது. இதனால் 5, 2, 1 மதிப்பெண் வினாக்களில் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால், மாணவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்காது. தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண் என்பதை 100 ஆக குறைத்து, தேர்வு காலம் 3 மணி நேரம் என்பதை 2:30 மணி நேரமாக குறைத்துள்ளனர். 
தற்போது 7 - 5 மதிப்பெண் பெரிய வினா 7 - 3மதிப் பெண் நடுத்தர வினா, 7 - 2 மதிப்பெண் வினா, 20 - 1 மதிப்பெண் வினா என மொழிப்பாடத்தில் வருவ தால், 2:30 மணி நேரத்துக்குள் எழுத முடியாது. 
இதுவரை இல்லாத வகையில் நீதி, பிரச்னை தொடர்பான வினாவை கேட்டு, அதற்கான விடையை மாணவரே 'தீர்வு' சொல்வது போல சில வினாக்கள் வருகின்றன. அவ்வினாவுக்கு
மாணவரின் பதிலுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும் என உள்ளது. 
தமிழில் குறிப்பிட்ட பகுதி, ஹிந்தி உள்ளிட்ட பல பாடங்களுக்கான வினாக்கள் டைப் அல்லது கம்ப்யூட்டரில் பிரின்ட் செய்யப்படா மல், அவசர கோலத்தில் கையால் எழுதி வெளியிட்டுள்ளனர். அதில் பல அடித்தல் திருத்தங்களும் உள்ளன. 
கடந்த ஜூன் 7 ல் பள்ளி திறக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, கடந்தாண்டு மாதிரியை பின்பற்றிவிட்டு, தற்போது புதிய மாதிரி வினா முற்றிலும் மாறுபட்டுள்ளதால், முதலில் இருந்து பாடத்தையும், வினாக்களை யும் மாணவர்களுக்கு விளக்க வேண்டி உள்ளது. 
வினா வழங்கப்பட்டாலும், விடை எவ்வாறு இருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும், எந்தெந்த குறைகளுக்கு எவ்வளவு மதிப்பெண் குறைக்க வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் இல்லாததால், புதிய வினாவுக்கு ஏற்ப, விடைகளை ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு விதமாக சொல்லித்தரவும், மாணவர்கள் பதிவு செய்யும் நிலை ஏற்படும். இதனால், மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதில் சிக்கல் எழும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)