பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.
பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டப்படி, பிளஸ் 1க்கு இதுவரை, மாவட்ட அளவில், இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
தனியார் பள்ளிகள், தாங்களே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தின. பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், மாணவர்கள், பிளஸ் 2வுக்கு தேர்ச்சி செய்யப்பட்டனர்.
எனவே, பிளஸ் 1 அடிப்படை பாடம் தெரியாத மாணவர்கள், தேசிய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை.
இதையடுத்து, அனைத்து வித நுழைவுத் தேர்வுகளையும், தமிழக மாணவர்கள் எதிர்கொண்டு தேர்ச்சி பெறும் வகையில், பிளஸ் 1 பாடத்தை தவறாமல் நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், முறைகேடு நடக்காமல் தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வை, தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.
தொழிற்கல்வி, செய்முறை அல்லாத பாடங்களுக்கும், மதிப்பெண் விபரங்கள் அறிவிக்கப்
பட்டுள்ளன.புதிய விதிப்படி, வினாத்தாள் அமையும் விதம், பாட வாரியான மதிப்பெண் போன்ற விபரங்களை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாதிரி தேர்வு வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Comments
Post a Comment