தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும்
தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : அமைச்சர் செங்கோட்டையன்
மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் என்றார். அரசுத் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரமணாக தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்படும் என்றார். 1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு சீருடையும், 6 - 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வேறு வண்ண சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கம் மாணவர்களுக்கு வேறு வண்ணத்திலான சீருடை என மூன்று வண்ணங்களில் சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
வரும் காலங்களில் 2 செட் பள்ளி சீருடைகள் மற்றும் 2 செட் சீருடைகள் வாங்கத் தேவையான பணத்தையும், மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
CBSE பாடத்திட்டத்தறிக்கு இணையாக அடுத்த 3 மாதங்களுக்குள் கல்வி திட்டம் முறையாக மாற்றியமக்கப்படும் என்றார். மேலும் பேசிய அவர் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி வடிவிலான கையேடு தரப்படும் என்றார். இதில் கேள்வி மற்றும் விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் என்றார். இந்த சி.டி வடிவிலான கையேடு சுமார் 30 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
Comments
Post a Comment