மருத்துவ கவுன்சிலிங் முதல் 26 பேர் 'ஆப்சென்ட்'


சென்னை: தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்.,  பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் வந்த, 10 பேர், சென்னை அரசு மருத்துவ க
ல்லுாரியை தேர்வு செய்தனர்.


தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. அதிலிருந்த, 131 இடங்களில், 14 இடங்கள் நிரம்பின; நிரம்பாத, 117 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டன.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், ஒன்று முதல், 1,209 இடங்கள் வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், தரவரிசையில், ஒன்று முதல், 26 இடங்கள் வரை பெற்ற மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைகளில், இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தரவரிசையில், 27வது இடத்தில் இருந்த மாணவர் அசிபக் சுலைமான், முதல் ஆளாக கவுன்சிலிங்கில் பங்கேற்று, சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து வந்த, 10 மாணவர்களும், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.

நேற்றைய கவுன்சிலிங்கில், 800க்கும் மேற்பட்டோர், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றதாக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று, தரவரிசையில், 1,210 முதல், 2,673 வரை இடம் பெற்றோர் பங்கேற்கின்றனர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank