பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது;
மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது. அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்கு பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது. எனவே, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, பிளஸ் 2 தேர்வு எழுதலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment