ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களைக் குறைத்துள்ளதாகப் பொருளாதார சர்வே தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், “பொதுத்துறை வங்கிகளில் தொலைத்தொடர்பு துறையின் பங்கு 2015-16ஆம் நிதியாண்டில் 3,456 கோடி ரூபாயாக இருந்தது. 2016-17ஆம் நிதியாண்டில் இந்த மதிப்பு 2,335 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. உள்கட்டமைப்புத் துறையில் செயல்படாத சொத்துகளின் பங்கு 2015-16ஆம் நிதியாண்டில் ஐந்து சதவிகிதமாக இருந்தது. இந்த மதிப்பு 2016-17ஆம் நிதியாண்டில் 8.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-17ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 7.98 சதவிகிதம் சரிந்துள்ளது. வோடஃபோன் நிறுவனத்தின் வருவாய் 5.14 சதவிகிதமும், ஐடியா நிறுவனத்தின் வருவாய் 4.91 சதவிகிதமும் சரிந்துள்ளது. ஜியோவின் வருகையால் டேட்டாவும் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 56.2 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் ஐடியா நிறுவனம் 11.7 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 5.9 மில்லியன் வாடிக்கையாளர்களையும் மட்டுமே பெற்றுள்ளன. ஜியோவின் வருகையால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களின் கட்டணங்களை குறைத்துக்கொண்டுள்ளது” என்று இந்த சர்வே கூறுகிறது.
Comments
Post a Comment