கம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.


கணினி மற்றும் இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள, பயிற்சி அளிக்குமாறு, பள்ளிகளுக்கு
, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்திஉள்ளது.

கணினி மற்றும், 'ஆன் -லைன்' என்ற இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் தவறான வழிக்கு சென்று விடாமல், பாதுகாப்பு முறைகளை கையாள பயிற்சி அளிக்குமாறு, பள்ளி நிர்வாகங்களுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ., கூடுதல் இயக்குனர், பிஸ்வாஜித் சாகா வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:
*இணையதளத்தில் பாதுகாப்பு பயன்பாட்டு வழிகளை, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்
* இணையதளத்தில் வைரஸ் மற்றும் தேவையற்ற தளங்கள் உள்ளே வருவதை தடுக்கும், 'பைர்வால்' என்ற, தடுப்பு தொழில்நுட்பத்தையும் கற்றுத்தர வேண்டும்
* மாணவர்களை முழுவதுமாக கண்காணிக்கும் வசதியுள்ள இடத்தில், இணையதளம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
* 'டிஜிட்டல்' கண்காணிப்பு தொழில்நுட்ப அமைப்பு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் இணையதள பயன்பாட்டை மேற்பார்வையிட, கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும்
* தேவையான, கல்வி தொடர்பான இணையதளங்களை மட்டுமே, மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
* இணையதள பாதுகாப்புமுறைகளை ஆசிரியர்களுக்கும் கற்றுத்தருவது அவசியம். கணினியை தவறாக கையாளுவதால், தகவல்கள் திருட்டு போக வாய்ப்புஉள்ளது
* அனுமதிக்கப்படாத, தடுக்கப்பட்ட இணையதளங்களை, பள்ளிகளில் பயன்படுத்தினால், ஆசிரியர், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
* பள்ளிகளில் இருந்து வெளியே சென்றவர்களின், கணினி பயன்பாட்டு அனுமதியை தாமதமின்றி, ரத்து செய்ய வேண்டும். பொது பயன்பாட்டில் உள்ள, பள்ளி கணினியில் மாணவர்களின் புகைப்படம், 'வீடியோ'க்களை சேமித்து வைக்கக் கூடாது
* உரிமம் பெற்ற மென்பொருள்களையே பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் கணினி பயன்பாடு குறித்து, பாதுகாப்பு விதிகள் ஏற்படுத்தி பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank