'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு !!!


       தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 





தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி. எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. தமிழகத்தில் மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதனால், 'நீட்' தேர்வை அடிப்படையாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை இயற்றியது. 

இதை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ரத்து செய்தன. அதனால், 'நீட்'  தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும் என, முடிவாகியிருந்தது.இந்நிலையில், 'அவசரசட்டம் இயற்றினால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க, மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக, அறிவித்துள் ளார்.

இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரத மரையும், என்னையும், சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகார அமைச்சர், ஜிதேந்திர சிங் போன்றோரை சந்தித் தனர்.இதில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தமிழகத்தில், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகளில், 'நீட்' அமலுக்கு வந்துவிட்டது.

'நீட்' தேர்ச்சியில், தமிழக கிராமப்புற மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், மருத் துவ வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை ஆதரிக்க தயார். இதே கோரிக்கையை தான் தமிழக அரசும் வைக்கிறது.

இதுகுறித்து, பிரதமரை சந்தித்து, நானும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசினோம். தமிழக அரசு வழங்கியுள்ள புள்ளி விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். அதன்படி, தமிழகத்திற்கு, இந்த ஆண்டு மட்டும், 'நீட்' தேர்வில், விலக்கு கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.

பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலரிடமும் பேசினோம். அதற்கு, 'நீட் தேர்வு தொடர்பாக, மத்திய அரசு இனி, சட்டம் கொண்டு வராது;மாநில அரசுஅவசர சட்டம் இயற்றினால், அதற்கு நாம் உதவ தயாராக உள்ளோம்' என, பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.
எனவே, கிராமப்புற மாணவர்களின் நிலைமையை விளக்கி, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைப்பு தர, மத்திய அரசு தயாராக உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து, நிரந்தர விலக்கு கிடையாது. தமிழக, 'மெட்ரிக்' பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் பயிற்சி அளித்து, 'நீட்' தேர்வில் தகுதி பெற வைத்தால், தமிழகத்தில் மட்டு மின்றி, வெளிமாநிலங்களில் உள்ள கல்லுாரி களிலும், தமிழக மாணவர்கள் மருத்துவ இடங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவசர சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார். 

சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்றிரவு டில்லி சென்று, முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சிக்கு, பலன் கிடைக்கிறது. தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதால், பல மாதங்களாக நீடித்த, மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு கிடைத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, 'கட்-ஆப்' கணக்கிட்டு, 17ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)