தீபாவளி முதல் ஜியோ பிராட்பேண்ட்!



      ஜியோ நிறுவனத்தின் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை தீபாவளி முதல்  தொடங்கவிருப்பதாக இஷா அம்பானி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதிரடியான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியத் தொலைத்தொடர்பு துறையையே ஆட்டம்காண வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஃபைபர் இணைய இணைப்புச் சேவையை தொடங்கவிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இதில், 500 ரூபாய்க்கு 1000 ஜி.பி. இலவச டேட்டா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவின் முன்னணி 100 நகரங்களில் இச்சேவை தீபாவளி முதல் தொடங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

           ஜியோ 4ஜி சேவைகளைப் போன்றே பிராட்பேண்ட் கட்டணங்களும் மலிவு விலையில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ரூ.500 மட்டுமின்றி அதிக சேவைகளை வழங்கும் டேட்டா திட்டங்களும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பிராட்பேண்ட் சேவையில் களமிறங்கும் ஜியோ நிறுவனம் இப்பிரிவிலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துப் பிற நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)