திடீரென சர்க்கரையின் அளவு குறைந்தால் உடனடியாக செய்ய வேண்டியது என்னென்ன?


இரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரிப்பது மட்டுமல்ல குறைந்தாலும் பிரச்சனை தான்.

ரத்தத்தில் சர்க்கரையளவு குறைந்தால் சோம்பல், வியர்த்து கொட்டுதல், அதீத பசி, தலைவலி, இதயம் வேகமாக துடிப்பது போன்றவை ஏற்படும்.

இதனால் மூளைக்குத் தேவையான குளூக்கோஸ் கிடைக்கமல் தடைப்படுவதால் மயக்கமும் ஏற்படும். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்திவிடும். வீட்டிலிருக்கும் போது லோ சுகர் ஆகிவிட்டால் என்ன செய்வது எப்படி தப்பிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

லோ சுகருக்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக கிட்சனில் இருக்கும் சர்க்கரை, தேன், ஜாம் என இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள். இது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையளவை உயர்த்தும். இதனால் நீங்கள் சுதாரித்து உதவிக்கு ஆட்களை அழைக்க முடியும்.

எல்லாருக்கும் காலை உணவு அவசியம். லோ சுகர் இருப்பர்கள் ப்ரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளை காலை உணவாக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால், ப்ரோட்டின் மெதுவாக ஜீரணமாகும் அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணவுகளில் இருக்கும் க்ளுக்கோஸை ரத்தத்தில் சேர்க்கும் என்பதால் லோ சுகர் ஆவது குறையும். முட்டை, சீஸ், சிக்கன் போன்றவற்றில் அதிக ப்ரோட்டீன் உள்ளது.

மூன்று வேளை நிறைய உண்பதை விட சிறிது சிறிதாக ஐந்து வேலை சாப்பிடுங்கள். உணவு இடைவேளையை அதிகரியுங்கள், இதனால் ரத்தத்தில் எப்போதும் சர்க்கரையளவு இருந்து கொண்டேயிருக்கும்

சிலர் தூங்கும் போது லோ பிரசர் ஆகி மயக்கமடைந்திருப்பர் அதை நாம் கண்டு சிகிச்சை அளிக்கும் முன்னர் பாதிக்கப்பட்ட நபர் மிக மோசமான நிலைக்கு சென்றிருக்க கூட வாய்ப்புகள் உண்டு. இதனை தவிர்க்க முந்திரியை பொடியாக்கி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக ஒரு டம்பளர் நீரில் முந்திரி பவுடர் ஒரு டீஸ்பூன், தேன் இரண்டு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்துவிட்டு படுக்கச் செல்லலாம்.

காபியில் இருக்கும் கஃபைன் என்ற பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சக்கூடியது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று முறை என்று குடிப்பதை தவிர்த்திடுங்கள். அதே போல ஆல்கஹால் குடிப்பதையும் தவிர்த்திடுங்கள்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு. சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி, வாக்கிங், ஸ்கிப்பிங் போன்றவை செய்யலாம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)