அரசு பள்ளிகளில் பயிற்றுனர்கள் பற்றாக்குறையால்... தொழிற்கல்வி தொடருமா?

அரசு பள்ளிகளில் பயிற்றுனர்கள் பற்றாக்குறையால்... தொழிற்கல்வி தொடருமா? வரும் கல்வி ஆண்டில் இப்பிரிவு இருக்குமா??
   அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதா
ல், வரும் கல்வியாண்டில், இப்பாடப்பரிவு மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளது.கலை மற்றும் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுப்போர், உயர்கல்வி முடித்த பின்பே, படிப்புக்கான பணியில் சேரும் வாய்ப்புள்ளது.ஏழ்மை காரணமாக பலரும், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளி படிப்புபோடு நிறுத்திவிட்டு, பணியில் சேர்ந்தனர்.
இந்நிலையை மாற்ற, பள்ளிப்படிப்பை முடித்து, பணியில் உள்ளவாறு, உயர்கல்வியை தொடர, கடந்த 1978ம் ஆண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவு செயல்படுத்தப்பட்டது. துவக்க நிலையில், இருபதுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டிருந்தது.பின்பு, அரசிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால், தற்போது, இந்த பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துவிட்டது. கணக்குப்பதிவியல், கருத்தியல், இயந்திரவியல், உட்பட 9 பிரிவுகள் மட்டுமே பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. கைகொடுக்கும் கல்விஉடுமலையில், நான்கு அரசு மற்றும் மூன்று அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கணக்குப்பதிவியல், தணிக்கையியல், இயந்திரவியல் பாடப்பிரிவுகள் செயல்படுகின்றன.
அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடப்பிரிவுகளே அடுத்தகட்ட வாய்ப்பாக உள்ளது.ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த, கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர்ந்து, சுய முயற்சியால் மட்டுமே மேற்படிப்பை தொடர இயலும் என்ற சூழலில், அவர்களுக்கு தொழிற்கல்வியே முழுமையான நம்பிக்கையாக உள்ளது.
கல்வித்துறையின் சார்பில் எவ்வித முக்கியத்துவம் வழங்காமல் இருப்பது, மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சரிவுக்கும் காரணமாகி வருகிறது.பற்றாக்குறையாகும் பயிற்றுனர்கள்தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ள பள்ளிகளில், இரண்டு தொழிற்கல்வி பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். உடுமலையில், மூன்று பள்ளிகளில் மட்டுமே இரண்டு பயிற்றுனர்கள் தற்போது உள்ளனர்.
அப்பள்ளிகளிலும், தொடர்ந்து அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், அந்த ஆசிரியர்களும் ஓய்வு பெறுகின்றனர்.இதனால், இப்பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடரப் போவதில்லை எனவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல், சிறப்பு ஊக்கத்தொகை போன்ற சலுகைகளும் கிடையாது.
எளிதாகும் வேலைவாய்ப்பு
பிளஸ் 1, 2 வகுப்புகளில் இப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், வங்கி மற்றும் பொறியியல் உட்பட பல்வேறு துறைகளில் பணிசெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு அரசு கலைக் கல்லுாரிகளில் 20 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது.பொறியில் படிப்பை தேர்வு செய்வதற்கு, அறிவியல் பாடத்துக்கு அடுத்ததாக இப்பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப்பிரிவில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், எளிதாக பொறியியல் படிப்பில் நுழைய முடியும். மாணவர்களிடமும் இப்பாடத்துக்கு வரவேற்பு குறைந்ததே இல்லை.சில பள்ளிகளில் அறிவியல், கலை பிரிவுகளில் இல்லாத அளவிற்கு, இப்பாடத்தில் மாணவர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.இவ்வாறு பல்வேறு வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய தொழிற்கல்வி பாடத்துக்கு அரசிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் பிளஸ் 1, 2 என இரண்டு வகுப்புகளையும் ஒரு தொழிற்கல்வி பயிற்றுனர் மட்டுமே நடத்த வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், ஆசிரியர் இல்லாததால், தொழிற்கல்வி பாடத்தை நிறுத்துவதை தவிர, வேறுவழியில்லாத நிலையில் உள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர். இதனால் மேல்நிலை வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை சரியும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.பள்ளி நிர்வாகத்தின் பல ஆண்டு கோரிக்கைக்கு பின்பு, தற்போதுதான் புதிய தொழிற்கல்வி பிரிவுகள் சில பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அப்பள்ளிகளிலும் இரண்டாண்டுகளில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால், புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகளும் நிரந்தரமில்லை என்றாகிவிட்டது.அரசு இதனை கருத்தில்கொண்டு, தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் பள்ளியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)