'நீட்' விவகாரத்திற்கு தீர்வு உண்டா? அரசின் தலையீட்டால் குழப்பம்


        'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் தவறான அணுகுமுறையால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பறிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்கள்,
ஆசிரியர்கள் தெரிவித்துள் ளனர்.


தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க, 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும், அவசர சட்டத்தை இயற்றிய தமிழக அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இதனிடையே, 'நீட் தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்; அதில், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சத வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது. 'நீட் தேர்வே வேண்டாம்' என்ற, தமிழக அரசு, 'நீட் தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும்' என, திடீரென அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவப் படிப்பில், தமிழக அரசின் உள் ஒதுக்கீடு அரசாணையை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட மேல்முறையீடும், நேற்று தள்ளுபடியானது. அதனால், தமிழக பாடத் திட்ட மாணவர்களின் மருத்துவ கனவு கானல்
நீராகி உள்ளது.இது குறித்து, கல்வியாளர்களும், ஆசிரியர்களும் கூறியதாவது: உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் பல முறை உறுதியாக பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, வேறு வேறு வடிவங்களில், தமிழக அரசு மனு செய்கிறது. இதன்மூலம், உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கோபத்துக்கு தான், தமிழக அரசு ஆளாகி யுள்ளது. மற்ற மாநிலங் கள், உச்ச நீதிமன்ற உத்தரவைபின்பற்றியுள்ளன.
பொதுவாக, சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக பாடத்திட்ட மாணவர்கள், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் மற்றும் 'கட் -- ஆப்' பெறுவது வழக்கம். அதே போல், 'நீட்' தேர்விலும், தமிழக மாணவர்கள் ஓரளவு அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., மாணவர்களை பொறுத்தவரை, 'நீட்' தேர்வில், ஓரளவு மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2, 'கட் - ஆப்' மதிப்பெண் வரிசையில், அவர்கள் பின்தங்கி விடுவர்.எனவே, 'நீட்' மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு, சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கி, தரவரிசை பட்டியல் தயாரித்தால், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 95 சதவீத இடங்கள் கிடைக்கும். இந்த முறையைத் தான், கல்வியாளர் களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், தமிழக அரசு விரிவான ஆலோசனை நடத்தாமல், 'எடுத்தோம், கவிழ்த்தோம்' என, முன்னுக்குப் பின் முரணான முடிவுகளை எடுத்தது, தமிழக பாடத்திட்ட மாணவர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது.
அதே போல்,சி.பி.எஸ்.இ.,க்கு தனி ஒதுக்கீடு, தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு என, அரசாணை பிறப்பித்தது, தமிழக மாணவர்கள் மத்தியிலேயே, பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
'நீட்' தேர்வுப்படி, ஒரு வேளை, சி.பி.எஸ்.இ.,
மாணவர்களே முன்னணியில் வந்தாலும், தமிழக அரசின் கொள்கைப்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, இடங்கள் ஒதுக்க லாம். எனவே, 'நீட்' தேர்வை பின்பற்றினால், அதிலும், தமிழக மாணவர்கள் மட்டுமே, பயன் பெறுவர் என்பதை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைவிடப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்
கிராமப்புற மாணவர்களின் நலன் எனக்கூறி, தமிழக அரசு உள்ஒதுக்கீடு அரசாணை கொண்டு வந்தது. பின் தங்கிய மாணவர் களுக்கு,மருத்துவ சேர்க்கையில் இடம் கிடை க்க வேண்டும் என, அரசு நினைத்திருந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், உள் ஒதுக்கீடு என, அரசாணை கொண்டு வந்தி ருக்கலாம். ஆனால், அரசாணையில் அரசு பள்ளிகள் பற்றி எந்த தகவலும் இல்லை.
தமிழக பாடத்திட்டத்தில்,தனியார் பள்ளி களில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 45 லட் சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதை விட, 55 சதவீதம் குறைவாக, அரசு பள்ளி களில், 21.50 லட்சம் பேர் மட்டுமே படிக்கின்றனர். எனவே, தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை, தனியார் பள்ளிகளுக்கே சாதகமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank