சான்றிதழில் பிழை: இழப்பீடு வழங்க உத்தரவு


பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ஜமீல் பாட்ஷா என்பவர் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூறியிருப்பதாவது, "தனது மகள் கோபாலபுரத்த்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத் தேர்வு முடிந்து வழங்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் தவறான மதிப்பெண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, வேதியியல் பாட செய்முறை தேர்வில் பெறப்பட்ட 50 மதிப்பெண்ணுக்குப் பதிலாக வெறும் 5 மதிப்பெண்கள் மட்டுமே பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது அவர்கள் பள்ளி கல்வி துறைக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து பிழை திருத்தி சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழிலும் 50 மதிப்பெண்ணுக்குப் பதிலாக 5 மதிப்பெண் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் வழங்கிய சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டு 50 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சேவை குறைபாடு காரணமாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று ஆகஸ்ட்-7 ஆம் தேதி நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால்ராஜசேகரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான மதிப்பெண் சான்றிதழை வழங்கியதால் சம்பந்தபட்ட மாணவி உயர்கல்வியில் சேர்வதற்கு கால தாமதம் ஏற்பட்டதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால். தேர்வு முடிவு வெளியான 21 நாட்களிலேயே பள்ளி கல்வி துறை மதிப்பெண் சான்றிதழை வழங்கியுள்ளது. இருப்பினும் தவறான மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதால் மனுதாரருக்கும், அவருடைய மகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கலாம். எனவே, பள்ளி கல்வி துறை இயக்குநரும், தனியார் பள்ளி நிர்வாகமும் ஜமீல் பாட்ஷாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)