சமையல் காஸ் மானியம் முற்றிலும் ரத்து! அதிரவைக்கும் மத்திய அரசின் முடிவு!


       சமையலுக்காக பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் மானியத்தை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.


சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ஒரு மாதத்துக்கு 4 ரூபாய் வீதம் குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நீக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, 'சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை மாதம் 2 ரூபாய் வீதம் குறைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இனி மாதம் 4 ரூபாய் வீதம் குறைக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இப்போது, 14.2 கிலோ எடையுள்ள பனிரெண்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. 12-க்கு மேல் போனால், காஸ் சிலிண்டரை மானியம் இல்லாமல் 564 ரூபாய் வாங்க வேண்டி வரும். மத்திய அரசின் இந்த முடிவு சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)