இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உதவியாளர் பணி: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி
யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள 1500 உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு சென்னையில் நடக்க உள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மா
வட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
இலவச பயிற்சி வகுப்புகள்
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை கடந்த 2011 முதல் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் 12 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
300 பேர் தேர்வில் வெற்றி
இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். கல்லூரிபேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பயிற்றுநர்களாக இருந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.இன்று தொடக்கம்தற்போது, யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 1,500 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் இன்று முதல் தொடங்குகின்றன.
சனி, ஞாயிறுகளில் வகுப்பு
பாரிமுனையில் உள்ள சிஐடியு அலுவலகம் எண், 6 கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தில் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் காலை 9.30 முதல் மாலை 5.30மணிவரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோர் 9444641712, 9444982364, 9444241696, 9444928162, 9791116753, 9486111001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment