கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிக்க கவுன்சிலிங்கில் மாணவியர் ஆர்வம்
கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிக்க கவுன்சிலிங்கில் மாணவியர் ஆர்வம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., பாடப்பிரிவுகளில், மாணவியர் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். மாணவர்களை பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை, நிறைய
பேர் தேர்வு செய்துள்ளனர்.
கம்ப்யூட்டர்,சயின்ஸ், ஐ.டி., படிக்க,கவுன்சிலிங்கில்,மாணவியர் ஆர்வம்அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர கவுன் சிலிங், தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை பேராசிரியர்கள் குழு மூலம், இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.பொது பாடப்பிரிவுஜூலை, 17ல், கவுன்சிலிங் துவங்கி, சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 23ல், கவுன்சிலிங் துவங்கியது.கவுன்சிலிங் துவங்கி, 13 நாட்களை தாண்டி விட்ட நிலையில், இது வரை, 62 ஆயிரத்து, 615 இடங்கள் ஒதுக்க பட்டு உள்ளன.
இதில், 29 ஆயிரத்து, 309 பேர், முதல் தலைமுறை பட்ட தாரிகள்.ஒதுக்கீடு பெற்றவர்களில், 25 ஆயிரத்து, 298 பேர் மாணவியர்.பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ் - 5,869, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் என்ற, இ.சி.இ., - 7,794 மற்றும் ஐ.டி., என்ற, தகவல்தொழில்நுட்பத்தில் - 2,338 பேர் என, மாண வியர் சேர்ந்துள்ளனர்.இந்த மூன்று பாடப்பிரிவு களில், ஏதாவது ஒன்றைப்படித் தால்,இந்தியாவில் இயங்கும், சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ., நிறுவனங் களில் எளிதில் வேலைக்கு சேரலாம் என்ற எண் ணத்தில், மாணவியர் அதிக அளவில் சேர்ந்துள்ள னர். குறிப்பாக, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியரே, இந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர்.
இ.சி.இ., முன்னணி
மாணவர்கள் அதிகபட்சமாக, மெக்கானிக்கல் துறை யில் சேர்ந்து வருகின்றனர்.இதுவரை,12 ஆயிரத்து, 477 மாணவர்கள், இந்தப் பிரிவில் சேர்ந்துள்ளனர். அதேநேரத்தில், வெறும், 243 மாணவியரே மெக்கா னிக்கலை தேர்வு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக, மெக்கானிக்கல்தமிழ் வழி படிப்பில், 11 மாணவியர் சேர்ந்துள்ளனர்; ஆனால், மாணவர்கள், 144 பேர் சேர்ந்துள்ளனர்.பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டில், 11 ஆயிரத்து, 920 மாணவர்களுடன்,இ.சி.இ., முன்ன ணியில் உள் ளது.மெக்கானிக்கல், 11 ஆயிரத்து, 409; கம்ப்யூ., சயின்ஸ், 9,649; எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரா னிக்ஸ், 6,863; சிவில், 4,925; ஐ.டி., 3,860;எலக்ட்ரா னிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், 1,230 பேர் சேர்ந்துள்ளனர். இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கிற்கு, ஆக., 5 வரை, 94 ஆயிரத்து, 662 பேர் அழைக்கப்பட்டு உள்ள னர். இதில், 33 சதவீதம் பேரான, 31 ஆயிரத்து, 362 பேர் பங்கேற்கவில்லை. கலை, அறிவியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகள் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்ததே இதற்கு காரணம்.
* இன்ஜி., படிப்புக்கு மொத்தம் உள்ள, 1.75 லட்சம் இடங்களில், 15 நாட்கள் கவுன்சிலிங் கில், 62 ஆயிரத்து, 615 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, 1.13 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
* வரும், 11ம் தேதியுடன் பொது கவுன்சிலிங் முடிகிறது. இந்த ஐந்து நாட்களில், 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என, எதிர்பார்க்கப் படு கிறது.எனவே, கவுன்சிலிங்கின் இறுதியில், ஒரு லட்சம் இடங்கள்காலியாகலாம்.
Comments
Post a Comment