தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்ட குழு தலைவர் பேட்டி


        புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய பாடத்திட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். 
அகில இந்திய கல்வி நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடதிட்டங்களை வடிவமைக்கு
ம் பணிைய கல்வித்துறை தொடங்கி உள்ளது.

       அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஒரு பாட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக அனந்தகிருஷ்ணன்  நியமிக்கப்பட்டு, மண்டல வாரியாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சேலம், ஈரோடு உள்பட 8 மாவட்டத்தை சேர்ந்த கல்வியாளர்கள், பெற்றோர் சங்கத்தினர் என 500 பேர் பங்கேற்றனர். முன்னதாக பாடதிட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
  
          இன்றைய பாடதிட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேள்வி, விடையை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையால், மாணவர்களிடம் அடிப்படை அறிவு அறவே இல்லாமல் உள்ளது. இதனை மாற்ற முதலில் மாணவர் தன்னம்பிக்கை, அடிப்படை திறமை வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்பம், ெபாருளாதாரம், அரசியல், சமூக உள்ளிட்டவை அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றங்களை வரலாம். இதனை தைாியமாகவும், தன்னம்பிக்கையாகவும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைய உள்ளது. அதன்படி தமிழ்நாடு, பிற மாநிலம், என்சிஆர்டி, சிபிஎஸ்இ, கேம்பிரிட்ஜ், பிற நாடுகள் பாடதிட்டத்தை தொகுத்து வைத்துள்ளோம். வகுப்புக்கு ஏற்ற திறமை வளர்க்கும் வகையில் பாடதிட்டம் உருவாக்கப்படும். தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அதன்படி அறிவியல் கல்வி, தொழில்கல்வி ஒன்றிணைக்கப்படும். இன்ைறய காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் புகுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)