குரூப் - 4' பதவியில் 4,682 பேர்!!!
அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 4'ல் அடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்கு, 2016, நவ., 6ல் தேர்வு நடந்தது.
இதன் முடிவு, 2017, பிப்ரவரியில் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலை, 17 முதல், செப்., 6 வரை கவுன்சிலிங் நடந்தது. இதில், 2,708 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.
தட்டச்சர் பதவிக்கான கவுன்சிலிங்கில், 1,582 பேருக்கும், 'ஸ்டெனோ நிலை - ௩' பதவிக்கான கவுன்சிலிங்கில், 392 பேர் என, மொத்தம், 4,682 பேருக்கு, ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு, அந்தந்த அரசுத்துறைஅலுவலகங்கள் மூலம், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு, விரைவில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment