4ஜி.பி டேட்டா... 7 நாள்கள்... 5 ரூபாய்... ஏர்டெல் ஆஃபரில் மறைந்திருப்பது என்ன?

தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போவதாக வருந்தும் ஆளா நீங்கள்? உங்கள் பார்வையை டேட்டா பக்கம் திருப்புங்கள். ஜி.எஸ்.டி, பணவீக்கம், வறட்சி என பெரும்பாலான பொருள்களின் விலை ஏறிக்கொண்டேயிருக்க
, டேட்டாவின் விலை குறைந்துக்கொண்டே வருகிறது. ஜியோவின் வருகைதான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டிக்கொண்டே, வேறு வழியில்லாமல் மற்ற டெல்காம் நிறுவனங்களும் விலையைக் குறைத்து வருகின்றன. இந்த டேட்டா போரில் தற்போது ஏர்டெல் அறிவித்திருக்கும் ஐந்து ரூபாய் பிளான்தான் ’டாக் ஆஃப் இந்தியா’ ஆக இருக்கிறது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான இந்த ஐந்து ரூபாய் பிளானில், மொத்த 4ஜி.பி 4ஜி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி ஏழு நாள்கள் மட்டுமே.சமீபத்தில் ஏர்டெல், வேலிடிட்டி நாள்கள் முடிந்தாலும் மீதமிருக்கும் டேட்டா அடுத்த மாதக் கணக்கில் சேர்ந்துவிடும் என அறிவித்திருந்தது. அந்த ஆஃபர் ஐந்து ரூபாய் பிளானுக்கு கிடையாது. மேலும், 4ஜி ஹேண்ட்செட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் உண்டு என்கிறது ஏர்டெல். சரி, ’7 நாள்கள் முடிந்தப் பின்னால் மீண்டும் ஐந்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாமே... இப்படியே செய்தால் 28 நாள்களுக்கே 20ரூபாய்தான் செலவாகும்’ என நினைக்க முடியாது. இந்த ஆஃபர் ஒரு நம்பருக்கு ஒரு முறைதானாம். அதுவும் எல்லா எண்களுக்கு கிடையாது. தேர்தெடுக்கப்பட்ட எண்களுக்கும் மட்டுமே. பிறகு எதற்கு இந்த ஆஃபர் ஏர்டெல்? 

தமிழகத்துக்கு இந்த பிளான் உண்டா என ஏர்டெல் நிறுவனத்திடம் கேட்டோம். “இப்போதைக்கு தமிழகத்தில் இந்தப் பிளான் இல்லை. எதிர்காலத்தில் வந்தால் தெரியப்படுத்துகிறோம்” என்றார்கள். 


டேட்டா


ஆனால், ஏர்டெல் தரும் எட்டு ரூபாய் பிளான் உண்மையிலே பலன் தரும் பிளான் தான். 54 நாள்களுக்கு எந்த மறைமுக நிபந்தனைகளும் இல்லாமல் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா மட்டுமே இந்தப் பிளான்படி சார்ஜ் செய்யப்படும். 

பி.எஸ்.என்.எல்:


இதே சமயம் பி.எஸ்.என்.எல்லும் சில பிளான்களை அறிவித்திருக்கிறது. எந்தக் குழப்பமும் இல்லாமல், அனைத்து ப்ரீபெய்டு எண்களுக்கும் இந்த ஆஃபர் உண்டு என தெளிவாக அறிவித்திருக்கிறது பி.எஸ்.என்.எல்.


8 ரூபாய் பிளான்:

30 நாள்கள் வேலிட்டியுடன் வரும் இந்தப் பிளான்படி எந்த லோக்கல் காலையும் நிமிடத்துக்கு 15 பைசாவில் பேச முடியும். 


19 ரூபாய் பிளான்:

90 நாள்கள் வேலிட்டியுடன் வரும் இந்த பிளான்படி ஒரு நிமிடம் இணையம் பயன்படுத்த 35 காசுகள் மட்டுமே செலவாகும். 



சமீபத்தில் 429 ரூபாய்க்கு ஒரு பிளானை அறிவித்திருந்தது பி.எஸ்.என்.எல். அதன்படி 90 நாள்களுக்கு தினம் ஒரு ஜி.பி டேட்டாவுடன் அளவற்ற வாய்ஸ் கால்களையும் தருகிறது. இந்தியா முழுவதும் அமலுக்கு வந்த இந்தத் திட்டம் கேரளா மாநிலத்துக்கு மட்டும் பொருந்தாது.

பி.எஸ்.என்.எல் போல ஏர்டெல்லும் தனது ஆஃபர்களை அனைத்து டெலிகாம் சர்க்கிளுக்கும், அனைத்து எண்களுக்கும் வழங்கலாம். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட எண்களுக்கும் டெலிகாம் சர்க்கிளுக்கும் வழங்கும்போது குழப்பங்கள் வருகின்றன.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)