ரூ.5-க்கு 4ஜிபி டேட்டா: லோக்கலாய் இறங்கிய ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் ரூ.5 முதல் ரூ.399 வரை ரீசார்ஜ் கட்டணத்தை அறிவித்துள்ளது.


ஜியோ இலவச சேவைகள் முடிந்த நிலையில் கடந்த மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் இணைய ரிசார்ஜ் கட்டணங்களை வழங்கி வருகிறது. 
ஜியோவால் ஏர்டெலுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணத்தினால், ஏர்டெல் ரூ.5 முதல் துவங்கும் ரீசார்ஜ் கட்டண சேவைகளை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 
ஏர்டெல் திட்டங்கள்: 
# ரூ.5 மதிப்புள்ள ரீசார்ஜ்: 7 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். 4ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா கிடைக்கும். இந்த சலுகை 4ஜி முதல் முறையாக பயன்படுத்துபவர்களுக்கு ஒரே முறை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
# ரூ.8 மதிப்புள்ள ரீசார்ஜ்: 56 நாட்களுக்கு ஏர்டெல் உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்ற விகிதத்தில் வழங்கப்படும். 
#  ரூ.40 மதிப்புள்ள ரீசார்ஜ்: ரூ.35-க்கான வரம்பற்ற டாக் டைம் வழங்கப்படும்.  
# ரூ.60 மதிப்புள்ள ரீசார்ஜ்: இந்த திட்டமானது ரூ.58-க்கான வரம்பற்ற டாக் டைம் வழங்கப்படுகிறது. 
# ரூ.149 மதிப்புள்ள ரீசார்ஜ்: ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள், 4ஜி வேகத்திலான 28 நாட்கள் செல்லுபடியாகும் 2 ஜிபி தரவு டேட்டா வழங்கப்படும். 
# ரூ.199 மதிப்புள்ள ரீசார்ஜ்: 28 நாட்களுக்கு வேலிடிட்டி. வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1 ஜிபி அளவிலான 2ஜி/3ஜி/4ஜி டேட்டா கிடைக்கும். 
# ரூ.349 மதிப்புள்ள ரீசார்ஜ்: 28 நாட்களுக்கு செல்லுப்படியாகும் நாள் ஒன்றிக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா வழங்குகிறது. மேலும், 10% கேஷ் பேக் ஆஃபர் ஏர்டெல் பேமெண்ட் பேங்க் ரீசார்ஜ் மூலம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank