உங்களது மொபைல் நம்பருடன் ஆதார் எண் இணைப்பது எப்படி???


இந்தியாவில் ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் ஒன்றே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வரி கணக்கு சமர்பித்தல் மட்டுமின்றி உங்களது மொபைல் நம்பர் மற்றும் வங்கி கணக்குகளை எப்போதும் இயக்க வேண்டியது அவசியம் ஆகும்.


சமீபத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் இதற்கான விளம்பரங்களையும் மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

பிப்ரவரி 2018 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த பலரும் தங்களது ஆதார் எண்ணை சிம் கார்டுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதார் எண்ணுடன் சிம் கார்டை இணைப்பதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. இதை கொண்டு வலைதளத்தில் வருமான வரி பதிவு மற்றும் ஆதாரில் உள்ள தகவல்களை எடிட் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது நீங்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
ஆன்லைனில் ஆதார் எண்ணுடன் சிம் கார்டை இணைக்க முடியாது என்றாலும் இதனை எப்படி இணைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
வழிமுறை 1 : அருகாமையில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
வழிமுறை 2 : ஆதார் மையத்தில் வழங்கப்படும் ஆதார் சரிபார்ப்பு மற்றும் அப்டேட் செய்வதற்கான சீட்டை பெற வேண்டும். இந்த சீட்டை இணையத்தில் UIDAI வலைதளத்தில் இருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.
வழிமுறை 3 : ஆதார் சரிபார்ப்பு மற்றும் அப்டேட் செய்வதற்கா சீட்டில் உங்களது தகவல்களை பதிவிட்டு இணைக்கப்பட வேண்டிய மொபைல் போன் நம்பரை பதிவிட வேண்டும்.
வழிமுறை 4 : இனி உங்களது அடையாள சான்று ஒன்றின் நகலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வழிமுறை 5 : ஆதார் மையத்தில் பயோமெட்ரிக் சோதனையை நிறைவு செய்ய வேண்டும்.
வழிமுறை 6 : ஆதார் மையத்தில் தகவல்களை பதிவிட்டதற்கான சீட்டு வழங்கப்படும், இதைத் தொடர்ந்து பத்து நாட்களில் உங்களது சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
ஆதார் எண்ணுடன் சிம் கார்டை இணைத்த பின் மொபைல் போன் நம்பரை ஆன்லைனில் மாற்ற முடியும். எனினும் இதற்கான OTP நீங்கள் ஏற்கனவே இணைத்த நம்பருக்கே அனுப்பப்படும்.
வழிமுறை 1 : முதலில் UIDAI வலைத்தளம் சென்று ஆதார் சேவைகளுக்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 2 : இனி ஆதார் தகவல்களை அப்டேட் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்து அதற்கான வலைப்பக்கம் செல்ல வேண்டும்.
வழிமுறை 3 : இனி Click Here என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 4 : அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சா கோடு பதிவிட்டு OTP அனுப்பக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 5 : OTP பதிவிட்டு தகவல்களை அப்டேட் செய்யக் கோரும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
வழிமுறை 6 : மொபைல் நம்பர் பக்கத்தில் உங்களது புதிய மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)