தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்;
தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்; அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு
தொடக்க கல்வி இயக்ககமும் இணைந்து தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமை 2 நாட்கள் நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:–
மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகள் எதுவாக இருந்தாலும் அந்த தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில், அவர்களுக்கு 54 ஆயிரம் வினா–விடைகள் அடங்கிய புத்தகம் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி மையங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருப்பார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
புதிய பாடத்திட்டம் 3 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும். புதிய பாடத்திட்டம் மூலமாக நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
பயிற்சி முகாமில் தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழக பேராசிரியர் குமார் சுரேஷ், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
Comments
Post a Comment