குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிப்பு: அபராத கட்டணங்களை பரிசீலனை செய்ய எஸ்பிஐ முடிவு
மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது
குறித்து வந்த புகார்களையடுத்து, இதுகுறித்து பரிசீலித்து வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்திய ஸ்டேட் பாங்க், இந்த தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்
என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகையில், 75 சதவிகிதத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்கள் கணக்கில் இருந்து ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும், 50 சதவிகிதத்திற்கு குறைவாக இருப்பு வைத்திருப்பவர்கள் கணக்கில் இருந்து ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, கிராமப்புறங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.1,000 வைத்திருக்க ேவண்டும் என்றும் இதற்கு குறைவாக வைத்திருப்பவர்களிடம் இருந்து ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டணங்கள் மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ.யின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், அபராத கட்டணங்களை மாற்றியமைப்பது குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment