ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பித்தால் படிப்புக்கான பதிவு ரத்து.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டுவர உள்ளது.
இதற்கான வரைவு வழிகாட்டுதலை இப்போது யுஜிசி வெளியிட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கல்வியை மேம்படுத்தவும், தரமான ஆராய்ச்சியாளர்கள் உருவாவதை உறுதி செய்யும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உண்மையானவையா என்பதை உறுதி செய்ய, ஒவ்வோர் உயர் கல்வி நிறுவனமும் நவீன மென்பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் சோதித்த பின்னரே, ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, ஆராய்ச்சிக் கண்காணிப்பாளரிடம் சான்றுபெற்று, அதனை ஆராய்ச்சிக் கட்டுரையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தண்டனைகள் என்னென்ன?: ஆராய்சிக் கட்டுரைகளில் 60 சதவீதத்துக்கு மேல் திருடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் படிப்புக்கான மாணவரின் பதிவு ரத்து செய்யப்படும்.
கட்டுரை 40 முதல் 60 சதவீதம் வரை திருடப்பட்டிருந்தால், திருத்தியமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை ஓராண்டுக்குப் பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கால அவகாசம் அதிகபட்சம் 18 மாதங்களைத் தாண்டக் கூடாது.
10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை திருடப்பட்டிருந்தால், திருத்தியமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை அடுத்த 6 மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை யுஜிசி வரவேற்றுள்ளது. இதை ல்ஞ்ம்ட்ங்ண்.2017ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 30}ஆம் தேதி கடைசி நாளாகும்.
Comments
Post a Comment