மூளையின் கூர்மை, சுறுசுறுப்பு, நினைவாற்றலுக்கு செய்ய வேண்டியவை!


மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய
வேண்டும்.



1. தினமும் ஒருவாழைப்பழம் : காரணம், இதிலுள்ள ட்ரிப்டோபன், டைரோசின் என்ற அமினோ அமிலங்கள் மற்றும் செரோடோனின், டோபமைன் போன்ற இரசாயன சத்துக்கள்தான். கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் இவை உதவுகின்றன. வாழைப்பழத்தில் நிறைய உள்ள சி வைட்டமின் மூளைக்குத் தேவையான நார் எபினெரின் உருவாக்க உதவுகிறது. மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமலும் இது காக்கிறது.

 2. பப்பாளி : மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் இருக்க இதிலுள்ள சி வைட்டமின் உதவுகிறது, மூளைக்குத் தேவையான செரட்டோன் கிடைக்க உதவும் ஃபோலிக் அமிலம் இதில் தேவையான அளவு உள்ளது. பப்பாளி கண் நலத்துக்கும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் உதவும்.

 3. கருப்பட்டி வெல்லம் : பனஞ்சாற்றி-லிருந்து காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் மூளைச் சோர்வை நீக்க உதவுகிறது. இதிலுள்ள பி6, பி12 வைட்டமின்கள் அதற்கு உதவுகின்றன. வெதுவெதுப்பான சூட்டிலுள்ள பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் உடன் உற்சாகம் கிடைக்கும். 

4. சிவப்பரிசி : இதிலுள்ள வைட்டமின் பி மூளைச் செயல் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள நயசின், தையமின், ஐனோசிடால் போன்ற பி வைட்டமின்கள், ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், செரட்டோனாக மாற்றப்பட உதவுகின்றன. இது மன அமைதிக்கும், நினைவாற்றலுக்கும், மன நிறைவிற்கும் உதவுவதோடு, நல்ல உறக்கம் வரவும் உதவுகிறது. மன அழுத்தம் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது. 

5. கீரைகள் : கீரைகளில் ஞிபிகி அமிலம் உள்ளது. வல்லாரைக்-கீரை நினைவாற்றலை தர அதிலுள்ள ப்ரம்மிக் அமிலம் உதவுகிறது. இது குழந்தைகளின் மூளைக்கு டானிக் போன்றது. கீரைகள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லது. பசலைக்கீரை மூளைக்கு பெரிதும் நலம் சேர்க்கும். மலிவானவை என்பதால் கீரைகள் ஏழைகள் கூட அதிகம் உண்ண ஏற்றவை. 

6. வேர்க்கடலை : மூளைக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது, உகந்தது. பாதாம், வால்நட் போன்ற விலை கூடுதலான பருப்பு-களைவிட இதுதான் சிறந்தது. இதில் வைட்டமின் ஈ அதிகம். ஆக்சிஜன் எற்றத்திற்கு இது பெரிதும் பயன்படும். நரம்பு மண்டலத்தைப் பலப்-படுத்தவும். வேர்க்கடலை உதவுகிறது. இதிலுள்ள தைமின் என்னும் அமினோ அமிலம் மூளை நரம்பு மண்டலத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் புரதம் நிறைய உள்ளது. 

7. எள் : இதிலுள்ள செலினியம் என்னும் தாது உப்பு மூளை நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எள்ளில் உள்ள ஜிங்க் என்னும் தாதுப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மூளை நலன் பாதுகாக்கப்படுவதற்கு எள் இன்றியமையாதது. 

8. உறக்கம் : ஒரு நாளைக்கு ஏழு மணி நேர உறக்கம் கட்டாயம் தேவையாகும். இது மூளையின் நலத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெரிதும் பயன்படும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யாமல் வேலைகளை மாற்றி மாற்றி செய்தால் மூளை சோர்வடையாமல், சுறுசுறுப்படையும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank