எதையெல்லாம், எந்த தேதிக்குள் ஆதார் உடன் இணைக்க வேண்டும்.?
ஆதார் கார்டினை பலவற்றில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதற்கான கடைசி நாட்களும் அறிவிக்கப்படுகின்றன. மேலும் இவற்றினால் மக்களுக்கு பல நன்மைகள் உள்ளது எனக் கூறப்படுகிறது.
தனிநபரின் வருமானத்தை கணக்கிட ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது, இதன்படி வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பான்கார்டு: ஆதார் அட்டையை பான்கார்டு உடன் இணைக்க கடைசி தேதி வரும் டிசம்பர் 31ஆம் தேதி என்று மத்திய அரசு தகவல் தெ
ரிவித்துள்ளது, மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி என்று அறிவித்த நிலையில் இப்போது மாற்றி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை பான்கார்டு உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு: தனிநபரின் வருமானத்தை கணக்கிட ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது, இதன்படி வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்: மொபைல் பயனர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்க ஆதார் அட்டைய இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்போது புதிய மொபைல் சிம் கார்டுகளை வாங்கும் போது கண்டிப்பாக ஆதார் தேவைப்படுகிறது. ஆதார் அட்டையை இணைக்க கடைசி தேதி பிப்ரவரி 6, 2018 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment