தூய்மை: அரசுப் பள்ளிக்குத் தேசிய விருது!


தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைமிகு பள்ளிகளுக்கான தேசிய விருதுக்கு  நாகப்பட்டினம் அரசுப் பள்ளி தேர்வாகியுள்ளது.


வரும் 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் தேசிய இயக்கமாகத் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் எனப் பல இடங்களும் சமீப காலமாகத் தூய்மையாக உள்ளன.

இந்திய அளவில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளை ஆய்வின் அடிபப்டையில் தேர்வு செய்து, தேசிய விருது வழங்குவதை மத்திய மனிதவள அமைச்சகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சன்குப்பம் என்ற கிராமத்தில் இயங்கிவரும் பஞ்சாயத்து அரசு ஆரம்பப் பள்ளிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அதில் பள்ளிக் கட்டடங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இப்பள்ளியில் பயின்ற 80 மாணவர்கள் உட்பட இக்கிராமத்தில் 570 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அக்கிராமத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து சுகாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு, சுகாதாரத்தை ஏற்படுத்தியதைப் பாராட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அரசு வழங்க உள்ளது. பள்ளியில் சுத்தமான குடிநீர், கழிவறைகள், கைகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் போன்றவை சிறப்பாக இருப்பதால் இப்பள்ளிக்குச் சுகாதாரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 அரசுப் பள்ளிகளிலிருந்து தமிழ்நாட்டின் ஓர் ஓரத்தில் உள்ள பள்ளிக்கு இந்த விருது கிடைத்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank