TNPSC - வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு !!


தமிழ்நாடு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ள குரூப் ஒன் வனத்துறை பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குரூப் ஒன் சர்வீஸ் 1A பணிக்கு விண்ணப்பிக்க போட்டி தேர்வு எழுதுவோர்   விண்ணப்பிக்கலாம் .

வனத்துறை சார்பாக குரூப் ஒன் ஏ பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒன் டைம் பதிவுசெய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . குரூப் 1 ஏ வனத்துறைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலம் . அக்டோபர் 10 இறுதி தேதியாகும் . தேர்வு நடக்கும் தேதி டிசம்பர் 17 ஆகும்.

போட்டி தேர்வு

கல்வித்தகுதி :
குரூப் ஒன் ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் வனத்துறை என்பதால் அறிவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் . குரூப் ஒன் ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை வனத்துறை, சுற்றுசூழலியல் மற்றும் வேதியியல் , இயற்பியல் போன்ற அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மொத்தம் 14 பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் கடினபோட்டி இருக்கும் .
குரூப் ஒன் ஏ தேர்வில் முதண்மை, முக்கிய தேர்வு, நேர்முகதேர்வு மூன்று நிலைகள் உள்ளன.

குரூப் ஒன் தேர்வுக்கு விண்ணப்பிப்போர்கள் தங்கள் முதண்மை தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது , தேர்வு மையங்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத முடியும்
குரூப் ஒன் மெயின்ஸ் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் . வனத்துறை பணிக்கு விண்ணப்பிப்போர் வயது 21 முதல் 30 வரை மட்டுமே இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவோ , வங்கி மூலமாகவோ செலுத்தலாம் . மேலும் தேவையான தகவல்களை பெற அணுக வேண்டிய இணையதள முகவரியில் பெறலாம் .

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)