விமான பயணத்திற்கு இந்த 10ல் ஒரு ஆவணம் கட்டாயம் தேவை.. வெளியானது அறிவிப்பு

டெல்லி: விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய 10 சான்று விவரங்களை விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. 

புதிதாக வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சான்றுகள் இவைதான்:

பாஸ்போர்ட் 
வாக்காளர் அடையாள அட்டை 
ஒரிஜினல் ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் பான் கார்டு 
டிரைவிங் லைசென்ஸ் 
பணியிட அடையாள அட்டை
 மாணவர்களுக்கான அடையாள அட்டை 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அக்கவுண்ட் புத்தகம் 
பென்சன் கார்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம் மாற்றுத்திறனாளி அடையாள கார்டு 

இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களுடன் செல்லும் பெரியவர்கள் தங்களின் ஆவணங்களை காண்பித்தால் போதுமானது.




Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)