இலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை


தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த, 'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

'தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்காக, 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக வழங்கப்படும்' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
தற்போது, அதற்கான உரிமம் கிடைத்து விட்டதால், செட் - டாப் பாக்ஸ் வினியோகத்தை, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவங்கியுள்ளது. பொது மக்களிடம் இருந்து, ஒரு பாக்சுக்கு, 175 ரூபாய் வசூல் செய்ய, ஆப்பரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், செட் - டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள், அதிக தொகைக்கு விற்பதாக, புகார் கூறப்படுகிறது.
 சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கூறும்போது, 'எங்கள் ஆப்பரேட்டர், 1,200 ரூபாய் கேட்கிறார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை' என்றார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 500 - 800 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், 'பொதுமக்கள், 175 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை' என, தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)