2000 ருபாய்க்கு 4ஜி மொபைல்...Volte கால்கள்... ஜியோவுக்கு எதிரான ஏர்டெல் அஸ்திரங்கள்!!!!


Volte மொபைல்கள்தான் இப்போது டிரெண்ட். ஜியோ நெட்வொர்க் முழுவதும்
இந்த டெக்னாலஜியில் இயங்குபவை. இவை வழக்கமான வாய்ஸ் கால்களை விட தரமானவை; குறைந்த பேட்டரியையே எடுத்துக்கொள்ளு
ம். காலை கனெக்ட் செய்ய தேவைப்படும் நேரமும் குறைவு என ஏகப்பட்ட ப்ளஸ்கள் Volte க்கு உண்டு.
Volte என்றால் என்ன?
வாட்ஸ்அப் போன்ற மெஸெஞ்சர் மூலம் நாம் செய்யும் வீடியோகால்கள் முழுவதும் இணையத்தைப் பயன்படுத்தி செய்யப்படுபவை. நமது வீடியோவையும், ஆடியோவையும் அது டேட்டாவாக மாற்றி டிரான்ஸ்மிட் செய்யும். ஆனால், இதுவரை நாம் மொபைலில் செய்யும் கால்கள் இணையத்தை பயன்படுத்துபவை அல்ல. அப்படிச் செய்ய உதவும் தொழில்நுட்பம் தான் Volte. இன்னும் எளிமையாக சொல்லலாம்.
முதலில் வாட்ஸ்அப் மெஸெஜ் மட்டுமே அனுப்ப முடிந்தது. வாட்ஸ்அப் நிறுவனம் ஓர் அப்டேட் தந்தது. அதன்பின் நம்மால் வீடியோ கால்கள் செய்ய முடிந்தது. டெலிகாம் நிறுவனங்கள் அப்படி நமக்குத் தரும் அப்டேட் தான் Volte என்று சொல்லலாம்.
ஜியோ நெட்வொர்க் வந்தபோது பல மொபைல்களில் அது வேலை செய்யாது என்றார்கள். காரணம், அவற்றில் Volte தொழில்நுட்பம் கிடையாது என்பதுதான். தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த ஜியோ மொபைல்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.Volte மொபைல்களாக இருந்தாலும் அவற்றில் வாட்ஸ்அப் இயங்காது. அதன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வேறு என ஏகப்பட்ட குழப்பங்கள் வந்தன.
இந்தச் சூழலில்தான் ஏர்டெல்லும் Volte குளத்தில் குதித்திருக்கிறது. ஏர்டெல் இந்தச் சேவையை மும்பையில் அறிமுகப்படுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற டெலிகாம் சர்க்கிளுக்கும் விரைவில் Volte சேவையை ஏர்டெல் கொண்டு வரவிருக்கிறது.
ஏர்டெல் சோர்ஸ்களில் இதுபற்றி கேட்டபோது “Volte சேவைக்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரே மாதத்தில் அனைவருக்கும் Volte சேவை கிடைத்துவிடும். ஹெச்.டி தரத்தில் வீடியோ கால்கள் செய்ய ஏர்டெல் உதவும். இதற்காக தனியே டேட்டா கட்டணம் எதுவும் இருக்காது. Volte மூலம் கால் செய்யும்போது இடையில் ஒருவேளை 4ஜி சிக்னல் கிடைக்காமல் போனாலும் 3ஜி அல்லது 2ஜி நெட்வொர்க் மூலம் கால் தொடரும். கட் ஆகாது” என்றார்கள்.
இந்தச் சேவையை பெற உங்கள் ஏர்டெல் சிம் கார்டு 4ஜி ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோரை அணுகலாம்.
Volte கொண்டு வருவதே ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்திதான். மேலும், ஜியோ நெட்வொர்க்குக்கு அவர்கள் தாவாமல் இருக்க உதவும். இதோடு நில்லாமல், தனது Volte வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த ஏர்டெல்லும் குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இன்னமும் சந்தைக்கு வராத இந்த ஏர்டெல் 4ஜி மொபைல் ஜியோ மொபைலை விட அதிக வசதிகள் கொண்டிருக்கும் என நிச்சயம் நம்பலாம். தீபாவளிக்கு முன்னரே இந்த மொபைலை விற்பனைக்குக் கொண்டுவர ஏர்டெல் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏர்டெல் மொபைலின் சிறப்பம்சங்களாக கீழ்கண்டவை இருக்கலாம் என ஏர்டெல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-ஆண்டிராய்டு ஓ.எஸ்
-4 இன்ச் திரை
-1600 Mah பேட்டரி
-1 ஜிபி ரேம்
-முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள்.
ஆண்டிராய்டு ஓ.எஸ் இருப்பதால் அனைத்து ஆண்டிராய்டு ஆப்களையும் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும்.
தொழில்நுட்ப அடிப்படையில் ஏர்டெல்லும் ஜியோ போல மாறுவது சரிதான். டேட்டா பேக் விலை எப்படி இருக்கும் என்பதுதான் அடுத்தக் கேள்வி.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022