நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!
நிலவில் 50கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
நிலவிற்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து ரஷ்யா, இந்தியா, சீனா, நாடுகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் ஜப்பான் நாடும் நிலவு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் நிலவில் 50 கி.மீ நீளத்திற்கு குகை ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளது. ஜப்பானின் செலீன் விண்கலம் அனுப்பிய இதனை கண்டு பிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குகை சுமார் 31 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலவில் உள்ள மாரியஸ் என்ற எரிமலை வெடித்ததால் குகை போன்று தோன்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment