அரசு ஊழியர்கள் தாமதமாக வந்தால் நடவடிக்கை'!!!
அலுவலகத்துக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'
என, டில்லி மாநில அரசு எச்சரித்துள்ளது.
டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 'மாநில அரசின் அதிகாரிகள், ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்' என, தலைமைச் செயலர், சமீபத்தில் உத்தரவிட்டார். இந்நிலையில், 'தாமதமாக வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
துறையின் தலைவர், ஷில்பா ஹிண்டே வெளியிட்டுள்ள உத்தரவு: ஊழியர்கள், காலை, 9:30 மணிக்கு பணிக்கு வர வேண்டும். தாமதமாக வரும் ஊழியர்கள், அதிகாரிகள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 9:45 மணிக்கு பின் வந்தால், 'தாமதம்' என வருகைப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். ஒரு ஊழியர், ஒரு மாதத்தில், மூன்று முறை தாமதமாக வந்தால், அவரது விடுப்பில், ஒரு நாள் கழிக்கப்படும். தாமதமாக வருவதற்கான காரணம் குறித்து, விளக்க கடிதம் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment