எஸ்.பி.ஐ.: பரிவர்த்தனைக் கட்டணம் குறைப்பு!
டிஜிட்டல் திட்டத்தை மேம்படுத்தவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைக் கட்டணங்களை 80 சதவிகிதம் வரையி
ல் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ.எம்.பி.எஸ். (IMPS - Immediate Payment Service)பரிவர்த்தனைக் கட்டணங்கள் 80 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்.பி.ஐ. வங்கிச் சேவைகளுக்குப் பணமில்லாப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் உயர் மதிப்பு நோட்டுகள் மீது அறிவிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் பரிவர்த்தனைக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையிலும், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் இந்தக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. நிர்வாக இயக்குநரான ராஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
எஸ்.பி.ஐ. வங்கி ட்விட்டரில் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் 10.61 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 80 சதவிகித ஆதார் எண்களும், 50 சதவிகித மொபைல் எண்களும் ஜன் தன் - ஆதார் - மொபைல் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment