தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


 உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் நேற்று நடந்த
து.



முன்னதாக இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து ரூ.1 லட்சம் மதிப்பு புத்தகங்களை வழங்கினார். சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது: 
பதிப்பகங்கள் மூலமாகவும், சிறந்த கல்வியாளர்கள், சிறந்த நூல்களை சேகரித்து கல்வி கற்றுத் தரும் பல்வேறு நிறுவனங்கள், அரிய நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இருந்து நூல்கள், ஆவணங்களை பெற்று, உலகத் தமிழர்களுக்கு வழங்கும்  திட்டம் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
தமிழகத்தில் உள்ள பதிப்பாளர்கள் கல்வியாளர்களிடம் இருந்து  பெற்று டிஜிட்டல் முறையில் சரி செய்து நூல்களை வழங்கும் திட்டத்தின் தொடக்கமாக முதல்வரிடம் சிறந்த நூல்களை பெற்றுள்ளேன். அதற்கு பிறகு இந்த தொடக்க விழா நடக்கிறது. தமிழகத்தில் அரிய நூல்கள் சுமார் 3 லட்சம் அளவில் பெற உள்ளோம். அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதால் ஆசிரியர்கள் அவற்றை எளிதாக கையாளும் வகையில்  எதிர்காலத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். 
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ப்பதற்கான  இலக்கு என்று பார்த்தால் தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் முதல் 7 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா மாநிலத்திலும் 15 சதவீதம் இடம் உள்ளது. எதிர் காலத்தில் அதை இந்த அரசு உருவாக்கும்.  இவ்வாறு அவர்  தெரிவித்தார். 
வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழாசிரியர்கள்: விழாவில் அமைச்சர் பேசும்போது, மலேசியாவின் கல்வி அமைச்சர் இங்கு  வந்தபோது சிறந்த தமிழாசிரியர்கள் தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.  அதேபோல பல நாடுகளில்இருந்தும் தமிழாசிரியர்கள் வேண்டும் என்று  கேட்டுள்ளனர். அதற்காக தமிழாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்ப ஏற்பாடு  செய்யப்படும் என்றார்.
ஆந்திராவில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பயிற்சி மையங்களில் சேர விரும்பும்  மாணவர்களின் பட்டியல் பெறச் சொல்லியுள்ளோம். போட்டித் தேர்வு பயிற்சி மையம்,  தொடர்பாக தகவல்கள் தாமதமானால், மாணவர் சேர்க்கைக்கு எவ்வளவு நாள்  வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 
அடுத்த வாரம் வரையும் காலம்  நீட்டிக்கப்படும். அவர்களுக்கு  அடுத்த வாரம்  அடையாள அட்டை வழங்கப்படும். நவம்பர்  இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி பணிகள் தொடங்கும். இதற்காக ஆந்திரா  சென்று 54 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். அவர்கள் நாளை  மறுதினம் முதல் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கூறினார். 

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank