மாணவர் எண்ணிக்கை சரிவு; ஓவியப்போட்டி நடத்த உத்தரவு!!
நாட்டில் எரிசக்தியை சேமிப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி அளவில் ஓவியப்போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், நான்கு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியருக்கு
, எரிசக்தி தொடர்பான தலைப்புகளில், ஓவியப்போட்டி நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. செப்., 30க்குள் போட்டி நடத்தி, முதல் இரண்டு ஓவியங்களை தேர்வு செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில், 1.30 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் பங்கேற்ற நிலையில், தற்போது, பாதிக்கும் மேற்பட்டோர் பங்கேற்காமல் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓவியப்போட்டியை மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அக்., 15 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment