சி.பி.எஸ்.இ: விரும்பினால் மட்டுமே வெளிநாட்டு மொழிப் பாடங்கள்!!!
மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
மாணவர்கள் வெளிநாட்டு மொழிப் பாடங்களை விரும்பினால் மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
தற்போதுவரை சி.பி.எஸ்.இ. தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி வகுப்புகள் குறித்த பட்டியலை வழங்கி வந்தது. அந்தப் பட்டியலிலிருந்து விருப்பமான பாடத்தைத் தேந்தெடுத்து மாணவர்கள் படித்து வந்தனர். இதை சி.பி.எஸ்.இ. மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் விரும்பினால் மட்டுமே வெளிநாட்டு மொழிப் பாடங்களை எடுத்துப் படிக்கலாம். வெளிநாட்டு மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள், அதை நான்காவது மொழிப் பாடமாகப் படித்துக்கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு வரை உள்ள மூன்று மொழிக்கொள்கையில் எந்தவிதமான மாறுதலும் இருக்காது. எட்டாம் வகுப்புக்குப் பிறகு, ஆங்கிலத்தைத் தவிர இதர மொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கான வாய்ப்பு மாணவர்களிடமே வழங்கப்படும். உயர் வகுப்பில், குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் முறை கைவிடப்படுகிறது. இந்த புதிய கல்விக்கொள்கை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
Comments
Post a Comment