ஆழமான காயங்களை ஒரே நிமிடத்தில் ஆற்றும் மாயப் பசை ’மீட்ரோ’ தயார்!!!
பயங்கர காயங்களை இனி தையல் போடாமால் குணப்படுத்தும் அற்புத கண்டுபிடிப்பை மருத்து ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.
ஸ்டாக்ஹோம்:
பெரிய அளவிலான ஆழமான காயங்களுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஒரு ஊசி சிரிஞ்சின் மூலம் இந்த பசையை காயத்துக்குள் செலுத்தி, புறஊதா கதிர் ஒளியின் மூலம் 60 நொடிகளுக்குள் விரைவாக காய வைத்து விட முடியும்.
விரிந்து, சுருங்கும் எலாஸ்ட்டிக் போன்ற தன்மையுள்ள இந்த பசை, களிம்பு போல திசுக்களுடன் படிந்து, உள்காயத்தை ஆற்றும் மருந்தாகவும் செயல்படும் ஆற்றல் கொண்டது என்பதை சிட்னி மற்றும் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூட்டாக கண்டுபிடித்தனர்.
இதயம், நுரையீரல் போன்ற விரிந்து சுருங்கும் உறுப்புகளில் ஏற்படும் காயங்களுக்கு இது மிகப்பெரிய அருமருந்தாக இருக்கும் என தெரிகிறது. ’மீட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பசையை எலி மற்றும் பன்றிகளின் காயங்களுக்கு பயன்படுத்திய ஆய்வில் பெரிய பலன் கிட்டியுள்ளது.
எனவே, ஆய்வக ரீதியாக மனிதர்களுக்கும் இந்த பசையை பயன்படுத்தி, அந்த சோதனை வெற்றி பெற்றால் பெரும் விபத்துகள் மற்றும் போர்முனைகளில் ஏற்படும் காயங்களில் ஏற்பட்டும் ரத்தப்போக்கை தடுக்கவும், காயங்களை ஆற்றவும் இந்த ’மீட்ரோ’ கைமேல் நிவாரணமாகவும் கண்கண்ட மருந்தாகவும் இருக்கும். இதன்மூலம், அவசர சிகிச்சை கிடைக்காமல் பலியாகும் பல உயிர்களை காப்பாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment