உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கி அழுத்தம் கொடுக்கிறதா?

கடந்த சில நாட்களில் மொபைல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன.

வாடிக்கையாளர் தனது மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கிச் சேவைகள் நிறுத்தப்படும் என்று வாடிக்கையளரை எச்சரிக்கும் குறுஞ்செய்திகள் இவை.

இவ்வாறு ஆதார் எண்ணுடன் பிற விவரங்களை இணைப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவையும் கொடுக்காத நிலையில், இதுபோன்ற குறுஞ்செய்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

மொபைல் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்கக் கூறும் அரசின் உத்தரவை எதிர்த்து அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற ஆணை

இந்த குறுஞ்செய்திகள் சட்டபூர்வமாக தவறாக இருப்பதால் இவை புறக்கணிக்கப்பட வேண்டும் என்று சிவில் லிபர்ட்டி சிட்டிசன் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோபால் கிருஷ்ணா கூறுகிறார்.

ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளில் 2013 செப்டம்பர் முதல் 2017 ஜூன் வரையிலான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்திலும் எந்தவொரு சேவையையும் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், வங்கிகளும் இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்புவதை நிறுத்தவில்லை.

தொலைத்தொடர்பு துறை

மொபைல் நிறுவனங்கள் அல்லது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொலைத் தொடர்பு துறையின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும்.

தற்போதைய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு மொபைல் எண் இணைப்பைப் பெற அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மட்டுமே போதுமானது. ஆனால் வாடிக்கையாளர் விவரங்கள் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவேண்டும் என்பதும் தொலைதொடர்புத் துறையின் சட்டங்கள் கூறுவதே.

ஆனால், 2017 மார்ச் மாதம் முதல் தொலைதொடர்புத் துறை வெளியிட்டுள்ள பல சுற்றறிக்கைகளில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆதார் எண்ணின் மூலமாக சரிபார்க்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


ஆதாரின் சட்டப்பூர்வத் தன்மை மீதான முடிவு இன்னும் வரவில்லை என்று சுட்டிக்காட்டும் சைபர் வழக்குகளில் சிறப்பு நிபுணர் விராக் குப்தா, ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவது தவறானது, சட்டவிரோதமானது என்கிறார் விராக் குப்தா.







சில சேவைகளுக்கு மட்டுமே ஆதார் எண்ணை அவசியமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் இவ்வாறு செய்தியனுப்பினால், அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாகவே பொருள் கொள்ளப்படும்.

"5 கோடி எண்கள் சரிபார்க்கப்படாமல் இருப்பதாக கூறிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மொபைல் எண்ணை தவறாக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து எண்களையும் சரிபார்க்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறை உத்தரவிட்டது'' என்கிறார் விராக் குப்தா.

இந்த நிலையில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. பயன்படுத்தியப்பிறகு கட்டணம் செலுத்தும் 'போஸ்ட் பெய்ட்' எண்கள் முன்பே சரிபார்க்கப்பட்டவை தானே? அடுத்தது, விவரங்களை சரிபார்க்க ஆதாரைத் தவிர வேறு வழியே இல்லையா?

வங்கிகளின் எச்சரிக்கை

ஐசிஐசிஐ வங்கியின் செயலியை திறந்தால், உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காவிட்டால், 2018 ஜனவரி முதல் தேதியில் இருந்து உங்கள் கணக்கை பயன்படுத்த முடியாது என்பதே முதல் அறிவிப்பாக வரும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனமாக படித்துப் பாருங்கள். வங்கியின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் சுயவிருப்பத்துடன் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்திருக்கிறீர்கள் என்று கருதப்படும்.

2016 ஆதார் சட்டத்தின்கீழ், வங்கி தொடர்புடைய அனைத்து பணிகளுக்கும் ஆதார் எண்ணை பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள்.

'அருகிலுள்ள ஏர்டெல் சேவை மையத்திற்கு சென்று பயோமெட்ரிக் மூலமாக விவரங்களை சரிபார்க்க வேண்டும்' என்று ஏர்டெல் நிறுவனத்தின் வலைதளத்தில் 'போஸ்ட் பெய்ட்' வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தபப்ட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தால் தனித்தனியாக பயோமேட்ரிக் சரிபார்ப்பு செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)