ஊதிய உயர்வில் " குழப்பம் " - முதல்வரிடம் குவியும் மனுக்கள்
தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்
.
ஊதிய,உயர்வில்,ஆசிரியர்கள்,மெர்சல்,முதல்வரிடம்,குவியும்,மனுக்கள்
மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., ௧௧ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.
இன்று விளக்க கூட்டம்
இந்த உயர்வு அறிவிப்பு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள்
தெரிவித்துள்ளனர். நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள், மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகம் முன், இன்று விளக்க கூட்டம் நடத்துகின்றனர்.
அதன்பின், 'நீதிமன்றத்தை அணுகுவோம்; அதிலும், முடிவு கிடைக்காவிட்டால், போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
முதல்வரிடம் மனுக்கள்
அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ -ஜியோ கிராப்' உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஆசிரியர், அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் வகையில், ஊதிய உயர்வு வரும் என, எதிர்பார்த்தோம். ஆனால், ௨௧ மாத நிலுவை தொகையை தர, தமிழக அரசு மறுத்து விட்டது.
Comments
Post a Comment