இனி பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்... வருகிறது புதிய வசதி!
இனி பேஸ்புக்கில் ஒரு டைம்லனுக்கு பதிலாக இரண்டு டைம்லைன்களை மக்கள் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடி விரைவில் இந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.
முதலில் இது சோதனை முயற்சியாக சில நாடுகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் குறைவாக இருக்கும் சிறிய நாடுகளில் இந்த அப்டேட் முதலில் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மக்களின் பேஸ்புக் பயன்பாட்டை எளிதாக்கவும், தேவையில்லாத போஸ்ட்டுகள் டைம்லைனில் இல்லாமல் போவதற்கும் இந்த அப்டேட் அதிகம் உதவுமென கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் தொடர்ந்து நிறைய அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.
சில நாட்களுக்கு முன் திடீரென்று பேஸ்புக் ஒருநாள் சரியாக இயங்கமால் போனது, பல இடங்களில் இது 'பேஸ்புக் ஷட் டவுன்' என்று கேலி செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதன்பின் பேஸ்புக் மக்களை கவரும் வகையில் நிறைய அப்டேட்களை அளிப்பதற்கு முடிவு செய்தது. பெரிய அளவில் அப்ளிகேஷனில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த மாற்றங்கள் எல்லாம் இன்னும் சில மாதங்களில் வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் தற்போது புதிய அப்டேட்டுக்கான திட்டம் ஒன்றில் இறங்கியுள்ளது பேஸ்புக். இதன்படி பேஸ்புக்கின் மொபைல் ஆப்களில் ஏற்கனவே பேஸ்புக் பேஜ்களுக்கான தனி டைம் லைன் இருக்கிறது. ஆனால் யாரும் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் புதிதாக இரண்டு டைம் லைன்களை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளது பேஸ்புக். அதன்படி நமது நண்பர்கள் போடும் போஸ்டுகள் தனியாக வரும். மற்ற பேஜ்களின் போஸ்டுகள் , ஸ்பான்சர் போஸ்ட்டுகள், வியாபார விளம்பரங்கள் எல்லாம் தனியாக வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் இன்னும் சில வாரங்களில் வரலாம்.
இந்த அப்டேட் முதலில் இலங்கை, பொலிவியா, கம்போடியா போன்ற சிறிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. அங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந்த மக்களை தேவை இல்லாத போஸ்டுகளை பார்ப்பதில் இருந்து காக்கும் என்று கூறுகிறது. மேலும் இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. நமக்கு தேவை இருந்தால் மட்டும் வியாபாரம் சார்ந்த போஸ்டுகளை பார்க்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
Comments
Post a Comment