புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!!
ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் விதமாக வோடஃபோன் நிறுவனம் ரூ.177 மற்றும் ரூ.496 ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு அ
றிவித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த ஆண்டின் இறுதியில் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்ததிலிருந்தே பிற நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துவருகின்றன. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் சேவை வழங்கிவரும் ஜியோவில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைத் திட்டங்கள் சிலவற்றை அறிவித்துவருகின்றன.
அந்த வகையில் தற்போது இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான வோடஃபோன் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.177 திட்டத்தில் புதிய வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெறலாம். ரூ.496 கட்டணத்திலான மற்றொரு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது முதல் ரீசார்ஜில் 84 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, இலவச ரோமிங் வசதி மற்றும் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெற்று மகிழலாம். இச்சலுகைகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நெட்வொர்க்கிலிருந்து வோடஃபோனுக்கு மாறுபவர்களுக்கும் பொருந்தும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment