புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options ) கவனிக்க வேண்டியவைகள் நான்கு:


1. 01.01.2016 இல் விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது .



2.ஆண்டு ஊதிய உயர்வு நாளில் நிர்ணயம் செய்வது .உதாரணமாக ஒர் ஆசிரியரது ஆண்டு ஊதிய உயர்வு நாள் ஏப்ரல் அல்லது ஜூலை அக்டோபர் எனில் அவர் தனது புதிய ஊதிய நிர்ணயத்தை ஏப்ரல் ஜூலை அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும்.
3. 01.01.2016 க்கு பதிலாக, தேர்வு நிலை ,சிறப்பு நிலை பெற்ற நாளில் கூட விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
4. 01/01/2016 க்கு பிறகு பதவி உயர்வு பெற்றிருப்பின் 1.1.16 க்கு பதிலாக பதவி உயர்வு பெற்ற நாளில் கூட விருப்பம் தெரிவித்து ஊதிய நிர்ணயம் செய்ய முடியும் . ஏனெனில் 1.1.16 இல் ஊதிய நிர்ணயம் செய்வதை விட பதவி உயர்வு பெற்ற நாளில் ஊதிய நிர்ணயம் செய்தால் ( *இடைநிலை ஆசிரியர்கள் 2800 தர ஊதியம் பெற்றவர்கள் கவனிக்க* ) ஊதியம் கூடுதலாக கிடைக்கலாம் .
👆🏿👆🏿இந்த நான்கு வழிகளில் ஊதியம் நிர்ணயம் செய்து பார்த்து எது தங்களுக்கு அதிகபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தருகிறதோ அந்த ஊதிய நிர்ணயத்திற்க்கு விருப்பம் ( option ) எழுதி கொடுங்கள்

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)